2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!

2025 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த உணவு வகைகளைக் கொண்ட நாடுகளின் தரவரிசையில் இலங்கை 07 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
காண்டே நாஸ்ட் டிராவலர்ஸ் ரீடர்ஸ் சாய்ஸ் (Condé Nast Traveler’s Readers’ Choice) விருதுகளின் அறிவிப்பில் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளது.
95.56% என்ற மதிப்பெண்ணுடன் இலங்கை ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
துருக்கி, பிரான்ஸ், மொராக்கோ, கொலம்பியா, மாலத்தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் போன்ற சிறந்த நாடுகளை விட இலங்கை முன்னணியில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கை உணவு வகைகளில் பெரும்பாலானவை வீட்டு சமையல் மரபுகளை மையமாகக் கொண்டுள்ளன.
இதேவேளை இந்த தரவரிசையில் 98.33 மதிப்பெண்களுடன் தாய்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
Top 10 countries with the world’s best food 2025:
1. Thailand – 98.33
2. Italy – 96.92
3. Japan – 96.77
4. Vietnam – 96.67
5. Spain – 95.91
6. New Zealand – 95.79
7. Sri Lanka – 95.56
8. Greece – 95.42
9. South Africa – 94.76
10. Peru / Maldives – 94.55