உலகம்

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக வரலாறு படைத்துள்ள சனே தகைச்சி (Sanae Takaichi)

ஜப்பானின் புதிய பிரதமராக தீவிரவாத பழமைவாத கொள்கைகளைக் கொண்ட பெண் ஒருவர் முதல் தடவையாகப் பதவியேற்கவுள்ளார்

பிரதமருக்கான தெரிவுக்காக இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 465 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் சனே தகைச்சி (Sanae Takaichi) 237 வாக்குகளைப் பெற்று புதிய பிரதமராகத் தெரிவானார்.

அத்துடன், இன்று(21) பிற்பகலில் பதவியேற்பதற்கு முன்னர் அதிகாரம் குறைந்த மேல் சபையின் பெரும்பான்மையையும் அவர் பெற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சுதந்திர ஜனநாயகக் கட்சி நேற்று(20) வலதுசாரி ஜப்பான் புதுமைக் கட்சியுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதை அடுத்து இன்று இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.

தகைச்சியின் கட்சியைச் சேர்ந்த தற்போதைய பிரதமர் ஷிகெரு இஷிபா(Shigeru Ishiba) கடந்த மாதம் தனது பதவி விலகலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

(Visited 7 times, 7 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்