இலங்கையில் மாசி கருவாட்டுக்குள் சிக்கிய மர்மம் – விற்பனையாளர் அதிரடி கைது

தங்காலையில் மாசி கருவாடு விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 கிராம் 280 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமைக்காக தங்காலை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மாசி கருவாடு விற்பனை செய்யும் போர்வையில் இந்த போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் 28 வயதானவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் சந்தேகநபர் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
(Visited 9 times, 11 visits today)