ஐரோப்பா

போர்த்துக்கலில் பொது இடங்களில் முகத்தை மூடி அணியும் ஆடைகளுக்கு தடை!

பாலினம் அல்லது மத” காரணங்களுக்காக பொது இடங்களில் முகத்தை மூடி அணியும் ஆடைகளுக்கு  தடை செய்யும் சட்டமூலம் போர்த்துக்கல் நாடாளுமன்றத்தில் நேற்று  நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் பெரும்பாலும் இஸ்லாமிய மதத்தினரை குறிவைப்பதாக கருதப்படுகிறது.

குறித்த சட்டமூலமானது தீவிர வலதுசாரி சேகா (far-right Chega party) கட்சியால் முன்மொழியப்பட்டது.

புதிய விதிகளின்படி விமானங்கள், இராஜதந்திர வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் முகத்தை மூடி அணியும் ஆடைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தினை மீறுபவர்களுக்கு   200 யூரோக்கள் முதல் 4,000 யூரோக்கள் ($234 மற்றும் $4,669) வரை அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசா (Marcelo Rebelo de Sousa) இன்னும் மசோதாவை அங்கீகரிக்க வேண்டும். அவர் அதை வீட்டோ செய்யலாம் அல்லது அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு மறுஆய்வுக்காக அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்