மடகாஸ்கரின் ஜனாதிபதியாக பதவியேற்ற ராணுவ தளபதி மைக்கேல் ராண்ட்ரியானிரினா (Michel Randrianirina)

இந்தியப் பெருங்கடல் தேசத்தை இராணுவம் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, மடகாஸ்கரின் புதிய ஜனாதிபதியாக CAPSAT ராணுவ தளபதி மைக்கேல் ராண்ட்ரியானிரினா (Michel Randrianirina) பதவியேற்றுள்ளார்.
தலைநகர் அன்டனனரிவோவில் (Antananarivo) உள்ள அரசியலமைப்பு நீதிமன்றத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
தனது முதல் உரையில், முன்னாள் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினாவை (Andry Rajoelina) நாட்டை விட்டு வெளியேறத் தூண்டிய மற்றும் அவரது பதவி நீக்கத்திற்கு வழிவகுத்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், “நாட்டின் நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்புகளை முழுமையாக சீர்திருத்துவதே எங்கள் முக்கிய நோக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மடகாஸ்கரில் கடந்த வாரம் வன்முறையாக மாறிய போராட்டங்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா அக்டோபர் 13ம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார்.
தொடர்புடைய செய்தி
மடகாஸ்காரில் (Madagascar) தீவிரமடைந்த போராட்டம் – நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி!