உலகின் பழமையான டைனோசர்களில் ஒன்றின் எலும்புகள் அர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு
உலகின் பழமையான டைனோசர் இனங்களில் ஒன்றின் புதைபடிவ எலும்புகளை அர்ஜென்டினா விஞ்ஞானிகள் ஆண்டிஸ் (Andes) மலைகளில் கண்டுபிடித்துள்ளதாக CONICET ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினாவின் வடமேற்கில் 9,842 அடி உயரத்தில், ஹுவாய்ராக்சர் ஜாகுயென்சிஸ் (Huayracursor Jaguensis) என்ற சிறிய டைனோசரின் கிட்டத்தட்ட முழுமையான எலும்புக்கூட்டை CONICET நிறுவனம் தலைமையிலான பழங்காலவியல் குழு கண்டுபிடித்துள்ளது.

டைனோசரின் மண்டை ஓட்டின் ஒரு பகுதியையும், வால் வரை நீண்டு செல்லும் முழுமையான முதுகெலும்பு நெடுவரிசையையும், கிட்டத்தட்ட அப்படியே இருக்கும் முன்கைகள் மற்றும் பின்கைகளையும் குழு கண்டறிந்ததாக CONICET தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரபல ஆசிரியர் அகஸ்டின் மார்டினெல்லி (Agustin Martinelli), ஹுவாய்ராக்சர் ஜாகுயென்சிஸ் 230 முதல் 225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்ததாக விவரித்துள்ளார்.




