உலகளாவிய ரீதியில் 16,000 பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ள நெஸ்லே (Nestle) நிறுவனம்
சுவிட்சர்லாந்தின் மிகப் பெரிய உணவுத் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே(Nestle) கிட்டத்தட்ட 16,000 பேரை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் வருமானத்தை இன்னும் துரிதமாகப் பெருக்க புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஃபிலிப் நவ்ரட்டில்(Philipp Navratil) முயல்வதை முன்னிட்டு ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
“உலகம் மாறுகிறது, நெஸ்லே அதைவிட துரிதமாக மாறவேண்டும்” எனவே, அடுத்த ஈராண்டுகளில் ஆட்குறைப்பு செய்யவேண்டிய கடினமான ஆனால் அவசியமான முடிவை எடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறோம் என்று தலைமை நிர்வாக அதிகாரி நவ்ரட்டில் அறிக்கை வெளியிட்டார்.
மூன்றாம் காலாண்டின் விற்பனை எதிர்பார்த்ததைவிட அதிகமாக வந்ததை அடுத்து நிறுவனம் புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது





