தாய்லாந்தில் சொத்தை கைப்பற்ற மலை உச்சியிலிருந்து மனைவியை தள்ளிய கணவர்
சீனாவை சேர்ந்த தன் கணவரால் மலையிலிருந்து தள்ளப்பட்டு கொலை முயற்சியில் உயிர் தப்பிய பெண் ஒருவர், 6 ஆண்டுகளின் பின்னர் விவாகரத்து பெற்றுள்ளார்.
வாங் நன் (Wang Nan) என்ற 38 வயதான பெண்ணே இவ்வாறு விவாகரத்து பெற்றுள்ளார்.
2019ஆம் ஆண்டு தனது கணவருடன் விடுமுறைக்காக தாய்லாந்திற்கு சென்றிருந்தார்.
அங்கு, அவரது சொத்தை கைப்பற்றும் நோக்கில் 34 மீட்டர் உயரமான மலையிலிருந்து வாங் நனை தள்ளி கொலை செய்ய முயன்றார்.
கொலை முயற்சியின் போது, வாங் கர்ப்பமாக இருந்தார். இந்த அனர்த்தத்தில் உயிர் தப்பிய போதும் அவரது கரு கலைந்தது.
இந்த கொடூர முயற்சிக்காக அவரது கணவருக்கு தாய்லாந்து நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
2023ஆம் ஆண்டு, வாங் சீனாவில் விவாகரத்து கோரிய நிலையில் பல தடைகள் காரணமாக அது தடைப்பட்டு வந்து. இந்நிலையில் 2025இல் அவரது விவாகரத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பின் பின்னர் சமூக வலைதளங்களில் வாங்க்கு ஆதரவு பெருகியதுடன், அவரது தன்னம்பிக்கைக்கும் உறுதியுக்கும் பாராட்டுகள் குவிந்தன.





