ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு 37,000 முதல் 45,000 டொலர் வரை வருமானம் பெறும் தொழிலாளர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலிய திறைசேரி சுட்டிக்காட்டியுள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, குறைந்த வருமானம் கொண்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் சராசரியாக 410 டொலர் அதிகரிப்பைப் பெறுவார்கள், மேலும் அவர்கள் ஓய்வு பெறும்போது 15,000 டொலருக்கும் அதிகமாகப் பெற முடியும்.
2027ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஓய்வூதியத் திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஊழியர் மற்றும் தொழில் வழங்குநரின் பங்களிப்புகளில் 15 சதவீத விலக்களிப்பு வழங்குகிறது. இருப்பினும், ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன்பு அதைப் பயன்படுத்த முடியாது என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் சுமார் 3.1 மில்லியன் குறைந்த வருமானம் பெறுபவர்கள் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை பெற தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





