பிக்பாஸ் வீட்டில் ரம்யாவுக்கு நடந்த விபரீதம்! பதறிய போட்டியாளர்கள்… அதிர்ச்சி அறிவிப்பு
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான சம்பவங்களுடன் ஒவ்வொரு நாட்களும் செல்கின்றன.
இம்முறை மக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எதிர்பாராததை எதிர் பாருங்கள்…. என்ற பிக்பாஸ் மந்திரத்திற்கு அமைய ஒவ்வொரு நாளும் அந்த வீட்டுக்குள் ஏதாவது ஒரு அசம்பாவிதம் வெடிக்கின்து.
அந்த வகையில், ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் டான்சர் ஆக இருந்து வந்த ரம்யா ஜு போட்டியாளராக வந்திருக்கிறார்.
இவர் அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறார். நேற்றைய தினமும் அவர் நடந்து செல்லும்போது திடீரென மயங்கி விழுந்து விடுகிறார்.
அவர் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற போட்டியாளர்கள் உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.
இதையடுத்து ரம்யாவுக்கு தேவையான சிகிச்சையளிக்கப்படுவதாக பிக்பாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..






