ரஜினி – கமல் இணையும் படம்? லோகேஷ் போடும் திட்டம் என்ன?

இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சின்மாவின் இரு மாபெரும் தலைகளாக இருப்பவர்கள் ரஜினி – கமல் தான்.
இவர்கள் இருவரும் ஆரம்பகாலத்தில் ஒன்றாக நடித்தார்கள். அதிலும் கமல் படத்தில் வில்லன் ரோலில் ரஜினி நடித்தார்.
ரஜினியை ஹீரோவாக்கிய பலரில் கமலும் ஒருவர் தான். இவ்வாறு இருவரும் ஒன்றாக இருந்த காலம் போய், போட்டியாக மாறிய காலமும் வந்தது.
ரஜினிக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளம், கமலுக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளம் என கொடிகட்டிப்பறந்த நிலையில் இருவரும் மீண்டும் இணைவதைப்பற்றி சிந்திக்கவே இல்லை.
ஆனால் காலங்கள் மாறியது. தற்போது ஒரு சூப்பர் ஸ்டாரின் படத்தில் பல சூப்பர் ஸ்டார்களை இணைப்பது என்பது ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டது.
அந்த ட்ரெண்டை கொண்டுவந்தவர் தற்போதைய இளம் இயக்குனர் லோகேஷ் தான். அந்த வகையில் தற்போது லோகேஷ் கையில் எடுத்திருப்பது ரஜினி-கமலை வைத்து படம் எடுக்கும் சவால்.
ஆனால் சமீபத்திய தகவல்படி, இந்த ரஜினி, கமல் கூட்டணிப் படத்திற்கான கதை இன்னும் உருவாக்கப்படவில்லை. லோகேஷ் தற்போது எந்த ஸ்கிரிப்டையும் ரெடி செய்யவில்லை. ரஜினி மற்றும் கமல் இணையும் ப்ராஜெக்ட் இன்னும் டிஸ்கஷன் லெவலில் மட்டுமே உள்ளது.
இதனால் ரசிகர்களிடையே சிறிய ஏமாற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவர்கள் நம்பிக்கையை விடவில்லை. ஏனெனில் லோகேஷ் கங்கராஜ் தனது கனவுப் படங்களில் ஒன்றாக இதை திட்டமிட்டிருக்கிறார் என்பதும் உண்மை.
ரஜினிகாந்த் தற்போது “ஜெயிலர் 2” படத்துக்கான முழுமுயற்சியில் இருக்கிறார். “ஜெயிலர்” படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, சன் பிக்சர்ஸ் இதன் தொடர்ச்சியை மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்து வருகிறது. இதற்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் வேறு இயக்குநர் ஒருவரின் கதை எனும் தகவலும் வெளிவந்துள்ளது. அதாவது “ஜெயிலர் 2”க்கு பிறகு அவர் லோகேஷ் படத்தில் அல்ல, வேறு இயக்குநருடன் இணைவார். இதனால் லோகேஷ், ரஜினி, கமல் கூட்டணி உருவாகும் படம் இன்னும் தாமதமாகும்.
மேலும், கமல் ஹாசன் “KH233” போன்ற படங்களில் பிஸியாக உள்ளார்.