மலையகத்தில் இருந்து சீறிப்பாயும் வேங்கை யோகி ஸ்ரீ… புல்லரிக்க வைக்கும் “லயத்துவாசி”

இலங்கையில் உள்ள பல கலைஞர்களைப்பற்றி நாம் பார்க்கும் போது வடக்கிலிருந்தவர்களே நினைவுக்கு வருவார்கள். ஆனால் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்த மலையகத்தமிழனை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
இன்று நாம் பார்க்கப்போவது “லயத்துவாசி” என்ற பாடல் மூலம் பிரபல்யமடைந்த ஒரு தமிழ் இளைஞனைப் பற்றித்தான்.
கேகாலை மாவட்டம் புலொத்கொபிட்டிய என்ற இடத்திலிருந்து வந்த, விஜயகுமார் யோகேந்திரன் என்ற இளைஞன், தற்போது பார்போற்றும் இளைஞனாக வளர்ந்துள்ளார்.
ஒரு மயைகத் தமிழனாக தன் மலையக மக்களுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முன்வந்த இளைஞன். தன் பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் தன் மக்கள் பட்ட கஷ்டங்களை, அவர்களின் சோகமான வரலாற்றை வெளிக்கொண்டு வந்த இளைஞனின் படைப்பு தான் ”லயத்துவாசி”
“மாறுமா மக்களின் நிலை? என்று மாறும் எந்தன் மக்களின் நிலை” என்ற பாடலை கேட்கும் போது உடல் புல்லரிக்கின்றது.
“கடந்த என் அனுபவங்களை கவிதையாக்கி, என் கவலையெல்லாம் பயிராக்கி, என் கோபத்தை இசையில் அமைத்து, என் மண்ணி ன் மாற்றம் காண எடுத்த அவதாரம் “லயத்துவாசி”