பொழுதுபோக்கு

ரோஹிணிதான் கல்யாணி என்ற உண்மை மீனாவுக்கு தெரியவரும் தருணம்! அதிரடியான திருப்பங்களுடன் “சிறகடிக்க ஆசை”

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் கல்யாணி என்கிற உண்மை மீனாவுக்கு தெரியவரும் வகையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியலில் தன் வாழ்க்கைக்காக பொய்க்கு மேல் பொய் கூறி, அனைத்து திள்ளுமுள்ளு வேலைகளையும் செய்யும் ரோகிணி தான் சீரியலின் ஹைலைட்.

இவர் என்னதான் கிரிமினல் வேலைகளை செய்தாலம் இறுதியில் முத்து – மீனாவிடம் மாட்டிக்கொள்வார்.

இந்த நிலையில், ரோகிணியின் தோழி வித்யாவுக்கு கல்யாணம் நடக்கிறது. இந்த கல்யாணத்திற்கு மீனாவையும் அழைத்திருக்கிறார் வித்யா.

இந்த கல்யாணத்திற்கு ரோகிணி, அவரது அம்மா மற்றும் ரோகிணியின் மற்றொரு தோழியான மகேஸ்வரி ஆகியோரும்  கலந்துகொள்கிறார்கள்.

அப்போது கல்யாணத்திற்கு வந்த பெண் ஒருவர், ரோகிணியை பார்த்து, அந்த பொண்ணு எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்… அவங்க பெயர் கல்யாணி என்று சொல்கிறார். இதையடுத்து அவரிடம் பேச அந்த பெண் செல்லும் போது ஓடி ஒளிந்துகொள்கிறார் ரோகிணி.

ஒளிந்துகொண்ட ரோகிணியிடம் யார் அவங்க என மகேஸ்வரி கேட்க, என்னுடைய முதல் கணவர்… அதாவது கிரீஷ் அப்பாவோட சொந்தக்காரங்க தான் அவங்க என சொல்கிறார்.

இதனிடையே அந்த பெண், மீனாவிடம் சென்று கல்யாணி எங்க இருக்காங்க என கேட்க, கல்யாணியா யார் அது என விசாரிக்கிறார். இதைப்பார்த்து பதறிப்போன ரோகிணி, அந்த பொம்பள வேற மீனா கிட்ட பேசுறாங்களே, நீ போய் சமாளி என தன்னுடைய தோழி மகேஸ்வரியை அனுப்பி வைக்கிறார்.

அந்த பெண்ணை பார்த்ததும் ரோகிணியின் அம்மாவும் பயந்து ஒருபுறம் மறைந்து கொள்கிறார்.

இதையடுத்து மீனா அங்கிருந்து சென்றதும் ரோகிணி வந்து அந்த பெண்ணிடம் பேசுகிறார். அப்போது அந்தப் பெண் நீ சேகர் பொண்டாட்டி கல்யாணி தான என கேட்கிறார். இதனால் ரோகிணி தான் கல்யாணி என்கிற உண்மை மீனாவுக்கு தெரியவருமா, இல்லையா என்பதுதான் இனிவரும் எபிசோட்டில் நாம் பார்க்க இருக்கின்றோம்….

(Visited 8 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்