சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக துனிசியாவில் பலர் மருத்துவமனையில் அனுமதி
துனிசியாவின் தெற்கு நகரமான கேப்ஸில் (Gabes) டஜன் கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அருகிலுள்ள ரசாயன தொழிற்சாலையிலிருந்து வரும் புகை சுவாசக் கோளாறு மற்றும் பிற சுகாதார பிரச்சினைகளுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், புகையிலிருந்து சுவாசிப்பதில் சிரமம் உள்ள குழந்தைகள் சிலர் கேப்ஸ் பல்கலைக்கழக (Gabes University) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவாசப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, சில நோயாளிகள் “கால் வலி, உணர்வின்மை” ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் பாதுகாப்பு துணைத் தலைவர் கோஃப்ரேன் டூட்டி கூறினார்.
துனிசிய கெமிக்கல் குழுமத்தின் (CGT) தொழிற்சாலையிலிருந்து வரும் புகையால் இத்தகைய சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





