இலங்கையில் உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை – ஒரே நாளில் 20,000 ரூபாயால் அதிகரிப்பு

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 20,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, தற்போது, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படும் நிலையில், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,125 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுகின்றனர்.
இதன் காரணமாக தங்கத்தின் விலை முதல் முறையாக வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.