பொழுதுபோக்கு

விஜய்யை போட்டுத்தாக்கிய அமீர் : பின்னால் நின்ற இளைஞன் செய்த காரியம்

விஜய் அரசியலுக்கு வந்தாலும் வந்தார் அவர் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

தற்போது கருர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவருக்கு விழுந்த அடி பெரும் அடியாக உள்ளது.

மொத்தம் 41 உயிர்கள் பலியாகிவிட்ட நிலையிலும், அவருக்கு ஆதரவு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்கின்றார்கள்.

ஆனால் ஆங்காங்கே சில எதிர்ப்பாலர்களும் இருக்கின்றார்கள். இது ஒன்றும் புதிய விடயம் அல்லவே.

அந்த வகையில் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் இயக்குநர் அமீரும் ஒருவர்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமீர் விஜய்யின் அணுகுமுறையை மாற்ற வேண்டும் எனக்கூறினார்.

அங்குதான் சிக்கல் தொடர்கிறது. மக்களோடு நீங்கள் பயணித்தால் மக்கள் உங்களுக்கு சுட்டிக்காட்டுவார்கள். ‘நான் உங்கள் ரசிகன் தான். உங்கள் பேச்சில் இந்த வார்த்தை வேண்டாம்’ என்று சுட்டிக்காட்டுவார்கள். நீங்கள் தனி விமானத்தில் போய்விட்டு வந்தால் மக்கள் கிட்ட எப்போதான் பேசுவீங்க? கட்சி ஆரம்பித்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. இதுவரைக்கும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை என்றெல்லாம் கூறினார்.

இது இவ்வாறு இருக்கும் போது த.வெ.க உறுப்பினர் ஒருவர் அமீருக்குப்பின் நின்றுகொண்டு விஜய்யின் புகைப்படம் கொண்ட கீ செயினை ஊடகங்களுக்கு காட்டினார்.

இது ஒரு சாராரிடையே அதிருப்தியையும், மற்றுமொரு சாராரிடைய இதுதான் விஜய்யின் பவர் என்றும் வாதிட்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்