ரஷ்யா ஊடான எல்லை பகுதியை மூடிய எஸ்தோனியா!
ரஷ்ய பிரதேசத்தின் ஒரு பகுதியாக செல்லும் வழியை நேற்று எஸ்தோனியா திடீரென மூடியுள்ளது.
குறித்த பாதையில் ரஷ்யாவின் துருப்புக்கள் இருப்பதாக கிடைகப்பெற்ற தகவல்களுக்கு அமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எஸ்தோனியாவின் இந்த நடவடிக்கையை காவல்துறை மற்றும் எல்லைக் காவல் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய கூட்டமைப்பின் எல்லைக்குள் வழக்கத்தை விட பெரிய அளவிலான ஒரு பிரிவு நகர்வதை எல்லைக் காவலர்கள் கவனித்ததை அடுத்து” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாரியம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
எஸ்தோனியாவில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அசம்பாவிதங்களை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை அவசியமாகியுள்ளதாக எஸ்தோனிய எல்லை நிறுவனம் கூறியது.
ரஷ்ய வீரர்கள் மீண்டும் அந்தப் பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாக உள்துறை அமைச்சர் இகோர் டாரோ இன்று அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த மாதம் மூன்று ரஷ்ய போர் விமானங்கள் அனுமதியின்றி எஸ்தோனியாவின் வான்வெளிக்குள் நுழைந்ததை தொடர்ந்து எஸ்தோனியா பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





