30 வினாடிகள் நடந்தால் போதும் – புதிய ஆய்வில் வெளியான மகிழ்ச்சி தகவல்
உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களுக்கு ஆய்வில் மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தற்போது வெளியான ஆய்வு ஒன்றிற்கமைய, வெறும் 30 வினாடிகள் நடைப்பயிற்சியும் ஆரோக்கியத்திற்குப் பெரும் நன்மைகளை அளிக்கக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.
Micro Walking எனப்படும் இந்த நடைமுறை, ஒரு நேரத்தில் 10–30 வினாடிகள் நடப்பதைக் குறிக்கிறது.
அலுவலகத்தைச் சுற்றி ஒரு சுற்று செல்லுதல், படிக்கட்டுகளில் ஏறுதல் போன்ற எளிய நடைப்பயிற்சிகள் கூட வளர்சிதை மாற்றத்தை தூண்டி அதிக கலோரிகளை எரிக்க உதவுகின்றன.
ரோயல் சொசைட்டி B வெளியிட்ட ஆய்வில், குறுகிய கால நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள், நீண்ட நடைப்பயிற்சி செய்தவர்களை விட 60 சதவீத அதிக ஆற்றல் செலவழித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, மனநலம், இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியம் ஆகியவற்றிலும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாகும்.
ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஐந்து நிமிட நடைப்பயிற்சி எடுத்துக்கொள்வதன் மூலம், சோர்வு, முதுகுவலி, மற்றும் மன அழுத்தம் குறையலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மொத்தமாக, நீண்ட நடைப்பயிற்சி செய்ய முடியாத நேரங்களில் கூட, சிறிய முயற்சிகள் பெரும் நன்மைகளைத் தரக்கூடும் என இந்த புதிய ஆய்வு வலியுறுத்துகிறது.





