நோபல் பரிசை வெல்லும் கனவு தகர்ந்ததால் கடும் கோபத்தில் ட்ரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதமையால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கோபமடைந்துள்ளார்.
மேலும் வெள்ளை மாளிகை கடுமையாக எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டதாக நோர்வே நோபல் குழு நேற்று அறிவித்துள்ளது.
இதனையடுத்து நோர்வே நோபல் குழு அமைதியை விட அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.
உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதை வெல்ல ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல மாதங்களாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
அமைதிக்கான பரிசைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை அவர் வெளிப்படையாக தெரிவித்ததுடன், அதற்காக கடுமையாக பாடுபட்டுள்ளார்.
காசாவில் இரண்டு ஆண்டுகால போர் முடிந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்தார், ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரை குழு ஏற்கனவே முடிவு செய்துவிட்டது.
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீபன் சியுங் சமூக ஊடகங்களில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.