ஆப்கானியர்களின் தைரியத்தைச் சோதிக்க வேண்டாம் – பாகிஸ்தானுக்கு தலிபான் அமைச்சர் எச்சரிக்கை

40 ஆண்டுகளுக்குப் பின்பு ஆப்கானிஸ்தானில் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்கக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு வெளியுறவு அமைச்சர் முட்டாகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிகாரப்பூர்வ விஜயமாக நேற்று டெல்லி வந்த ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி, இன்று தனது குழுவினருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் தாக்குதல் நடந்துள்ளது, பாகிஸ்தானின் இந்தச் செயலை நாங்கள் தவறாகக் கருதுகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்கக் கூடாது. யாராவது இதைச் செய்ய விரும்பினால், அவர்கள் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் எங்களைப் பற்றி கேட்க வேண்டும், அப்போதுதான் ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவது நல்லதல்ல என்பதை அவர்கள் விளங்க முடியும்” என்று தெரிவித்தார்.