ஆஸ்திரேலியாவில் வீடற்ற நிலையில் தவிக்கும் 65,000 பெண்கள்

ஆஸ்திரேலியாவில் வீட்டு வன்முறை மற்றும் வீடற்ற தன்மை என்பது ஒவ்வொரு ஆண்டும் 65,000 க்கும் மேற்பட்ட பெண்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகியுள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் வீடற்ற தன்மைக்கு குடும்ப வன்முறை முக்கிய காரணமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 67,000 பெண்களைப் பாதிக்கிறது என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
உலக வீடற்றோர் தினமான இன்று ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் வெளியிட்ட தரவுகளுக்கமைய, நியூ சவுத் வேல்ஸில் வீடற்ற மக்கள் தொகை 1,500 க்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டுவசதி சேவைகள் மற்றும் பெண்கள் பராமரிப்புக்கான தேவை மிக அதிகமாக இருந்ததால் போதுமான ஆதரவை வழங்குவது கடினமாக உள்ளதென பெண்கள் சமூக வீட்டுவசதி தலைமை நிர்வாக அதிகாரி அன்னபெல் டேனியல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வீடற்ற தன்மை ஆபத்தான விகிதத்தை எட்டியுள்ளது, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் வீட்டுச் சந்தையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் என ஹோம்லெஸ்னெஸ் ஆஸ்திரேலியா(Homelessness Australia) தலைமை நிர்வாக அதிகாரி கேட் கோல்வின் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் வாடகைகள், வீட்டு வன்முறை மற்றும் ஆரம்பகால தலையீடு இல்லாதது பெண்கள் மற்றும் குடும்பங்களை மேலும் நெருக்கடியில் தள்ளுவதாக அவர் கூறுகிறார்.
இதேவேளை, ஆஸ்திரேலியா 40 ஆண்டுகளாக உருவாகி வரும் வீட்டுவசதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அமைச்சர் அமைச்சர் கிளேர் ஓ’நீல் தெரிவித்துள்ளார்.