உலகம்

கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தம் ; இஸ்ரேல் மற்றும் காசாவில் மகிழ்ச்சி

காசா போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் ஏற்பட்ட செய்தியை அறிந்ததும் பாலஸ்தீன மக்களும் இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் குடும்பங்களும் இன்று (9) கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முயற்சியின் முதல் கட்டமாக, பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், துப்பாக்கிச் சூட்டை நிறுத்துவதற்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் இஸ்ரேலும் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸும் இன்று (9) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

எகிப்திய கடற்கரை ரிசார்ட்டான ஷார்ம் எல்-ஷேக்கில் மறைமுக பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரு தரப்பு அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை உறுதிப்படுத்தினர்.

இந்த ஒப்பந்தத்தின் அறிவிப்பு பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களிடையே கொண்டாட்டங்களுடன் வரவேற்கப்பட்டது.காசா தெருக்களில் நிறைந்திருந்த மக்கள் இந்த ஒப்பந்தம் போரை முடிவுக்குக்கொண்டு வந்து, தங்களை வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் என்ற நம்பிக்கையுடன் குரல் எழுப்பினர். எனினும், இஸ்ரேலியப் படைகள் இன்னும் அங்கிருப்பதால், தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவது குறித்து சிலர் நம்பிக்கை இழந்துள்ளனர்.

ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக கையெழுத்தாகும்வரை மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டாம் என்று ஹமாஸ் ஊடக அலுவலகம் மக்களை வலியுறுத்தியுள்ளது.இஸ்ரேலிய ராணுவமும் வடக்கு காசாவில் வசிப்பவர்களைத் திரும்பி வர வேண்டாம் என்று எச்சரித்து, அது ஓர் ஆபத்தான போர் மண்டலமாக உள்ளது என்று இஸ்ரேல் கூறியது.

இன்று(09) பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு கூடும் அவரது அரசாங்கத்தால் இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டவுடன் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!