லண்டனில் 8000 சிறுவர்களின் தரவுகளை திருடிய இரு இளைஞர்கள் கைது!
லண்டனில் உள்ள பாலர் பாடசாலை சங்கிலியில் சைபர் தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணினியை தவறாக பயன்படுத்துதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அவர்கள் இருவரும் எதிர்நோக்கியுள்ளனர்.
ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் பிஷப்ஸ் ஸ்டோர்ட்ஃபோர்டில் (Bishop’s Stortford, Hertfordshire) உள்ள குடியிருப்புகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் தற்போது விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலர் பாடசாலையில் இருந்து சுமார் 8,000 குழந்தைகளின் புகைப்படங்கள், பெயர்கள் மற்றும் முகவரிகளை ஹேக்கர்கள் திருடியதாகக் கூறப்படுகிறது. இது பெற்றோர்கள் மத்தியில் பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





