ஆஸ்திரேலியாவில் முதலை வாயிலிருந்து உயிர் தப்பிய அதிசய மனிதன்
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் snorkelling எனப்படும் குழாய்மூலம் சுவாசிக்கும் சாதனத்தைப் பயன்படுத்திக் கடலில் நீந்திக்கொண்டிருந்த நபரை முதலை ஒன்று தாக்கியுள்ளது.
இந்த நிலையில் Marcus McGowan என்ற நபர் முதலையின் வாயைத் தமது கைகளால் திறந்து உயிர் தப்பியுள்ளார்.
மெக்கோவன் அவரின் மனைவியோடும் நண்பர்களோடும் கடலில் அலையாடச் சென்றிருந்தார்.
முதலில் சுறாமீன் தம்மைத் தாக்கியதாக அவர் நினைத்தார். பின்பு அது முதலை என்பதை உணர்ந்தார்.
அதன் வாயைத் திறந்து தன் தலையை வெளியே எடுத்த அவர், முதலை அவரை மீண்டும் தாக்க முயன்றதாகக் கூறினார். ஆனால் அவர் அதனிடமிருந்து தப்பினார்.
குழுவின் அலறல் சத்தத்தைக் கேட்டுப் படகு அவர்களை அங்கிருந்து மீட்டெடுத்தது.
“நல்ல வேளை முதலை குழுவில் இருக்கும் பெண்களையோ பிள்ளைகளையோ தாக்காமல் என்னைத் தாக்கியது” என மெக்கோவன் McGowan தெரிவித்துள்ளார்.