புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மையைக் கண்டுபிடித்ததற்காக 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு
இவ்வாண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் ஷிமோன் சகாகுச்சி, அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த அவர்களின் கண்டுபிடிப்புக்காக இப்பரிசு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளியல் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியோருக்கும் அமைதிக்காகப் பாடுபட்டவர்களுக்கும் உலகளவில் உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு திங்கட்கிழமை (6) அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்படவுள்ளன.
(Visited 8 times, 1 visits today)





