குடும்பத்தோடு கிடா வெட்டி, பொங்கல் வைத்த தனுஷ்
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 1ஆம் திகதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரங்கபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலில் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபட்டு சென்றனர்.
இதையடுத்து படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தை, தாய், தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் செல்வராகவன் குடும்பத்தினர் முத்துரங்கபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி தரிசனம் செய்ய செல்லும்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் உறவினர்கள் தனுசை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.






