அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட சடலம் – தீவிர விசாரணைகள் ஆரம்பம்!
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கியர் பகுதிக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சார்லோட்-மெக்லென்பர்க் காவல் துறையின் செய்திக்குறிப்பின்படி, ஐரோப்பாவிலிருந்து வந்த அந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை வட கரோலினாவின் சார்லோட்-டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சார்லோட்-மெக்லென்பர்க் காவல் துறையின் கொலைப் பிரிவின் துப்பறியும் நபர்கள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)





