ஆப்கானிஸ்தான் முழுவதும் முடங்கிய தொலைத்தொடர்பு சேவைகள்!
ஆப்கானிஸ்தானில் நாடு தழுவிய ரீதியில் தொலைத் தொடர்பு சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டில் அரசமைத்துள்ள தலிபான்கள் ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்புகளைத் துண்டிக்கத் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாடு தற்போது “முழுமையான இணைய முடக்கத்தை” சந்தித்து வருவதாக, இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது.
சர்வதேச செய்தி நிறுவனங்கள் தலைநகர் காபூலில் உள்ள அலுவலகங்களுடனான தொடர்பை இழந்துவிட்டதாகக் கூறுகின்றன. ஆப்கானிஸ்தான் முழுவதும் மொபைல் இணையம் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான உறுதிப்படுத்தப்பட்ட காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, தாலிபான்கள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் விளக்கத்தின்படி ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





