‘சிறகடிக்க ஆசை’ மீனா போஸ்டருடன் சொன்ன குட் நியூஸ்
அண்மைக் காலங்களாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் நடிகைகளும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தலைதூக்கத் தொடங்குகின்றனர்.
அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்தவர் தான், மதுரை பெண்ணான கோமதி பிரியா. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘வேலைக்காரன்’ என்கிற சீரியலில் நடித்துள்ளார்.
ஆனால் இந்த சீரியல் இவருக்கு பெரிதாக ரீச் கொடுக்காத நிலையில், கடந்த 2- வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும், ‘சிறகடிக்க ஆசை’ தொடர் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது.
அமைதியும் – நிதானமும் கொண்ட மருமகளாக கோமதி பிரியா நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிக்க துவங்கிய பின்னர், கடந்த இரண்டு வருடமாக இவர் தான் சிறந்த நடிகைக்கான விஜய் டிவி விருதை வாங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழை தாண்டி, சில மலையாள மொழி தொடர்களிலும் கோமதி பிரியா நடித்துள்ளார். இந்த நிலையில், கோமதி பிரியா தன்னுடைய அடுத்த புராஜெக்ட் குறித்து இன்ஸ்டாகிராமில் தெரிவிக்க, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதாவது ‘அடியே சிறுக்கி மகளே’ என்கிற ஆல்பம் பாடலின் கோமதி பிரியா நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்ன மருமகள்’ சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நவீன் நடித்துள்ளார்.
இந்த லிரிக்கல் பாடலை, விமல் ராஜ் என்பவர் பாடல் எழுதி, கம்போஸ் செய்து டைரக்ட் செய்துள்ளார் உள்ளார். கிராமத்து சாயலில்… காதலர் வண்டியில் பயணிக்கும் போது அவர்களுக்கு நேரும் அனுபவத்தை கூறவரும் இந்த பாடல் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.






