தமிழ்நாடு பொழுதுபோக்கு

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் : நீலாங்கரையில் அதிகரிக்கும் பதற்றம்…

தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு மர்ம நபர் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விஜய்யின் வீட்டிற்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க நடிகர் விஜய்யின் வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள நீலாங்கரை வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிற்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை பரபரப்பை அதிகரித்துள்ளது..

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!