அதற்கு என்னை தூண்டியது அல்லு அர்ஜுன் தான் : தமன்னா
தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் டாப் நடிகையாக வலம் வருவபர் தமன்னா .
தற்போது சிறப்பு பாடலுக்கு படுகிளாமராக நடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கிய வெப் தொடரில் சிறப்பு பாடலுக்கு ஆட்டம் போட்டு பாலிவுட் சினிமாவையே அதிரவைத்தார்.

இந்நிலையில், டு யூ வான்ன பார்ட்னர் என்ற வெப் தொடரில் நடித்துள்ள தமன்னா, அதன் பிரமோஷன் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் பற்றி பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
அதில், அப்போது நான் தமிழ், தெலுங்கு மொழியில் எல்லா வகையான கமர்ஷியல் படங்களிலும் நடித்தேன்.
ஒவ்வொன்றிலும் நான்கு முதல் ஐந்து பாடல்கள் இருக்கும். ஆனால் கடினமான நடன அசைவுகளை முயற்ச்சிக்க என்னைத்தூண்டியது அல்லு அர்ஜுன்தான். என்னை ஊக்குவித்தார்.

அவருடன் பத்ரிநாத் படத்தில் நடித்தப்பின் எனக்கு நிறைய நடனமாடும் வாய்ப்புகள் கிடைத்தது. சிறப்பு பாடல்களால் தான் பிரபலமடைந்திருக்கிறேன் என்று தமன்னா ஓபனாக பேசியுள்ளார்.





