ஐரோப்பா செய்தி

ஏகாதிபத்திய வழிமுறையை திணிக்கும் புட்டின் – பிரித்தானிய உளவுத்துறை தலைவர் அதிர்ச்சி தகவல்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புட்டின் விரும்பவில்லை என பிரித்தானிய உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறும் பிரித்தானிய உளவுத்துறை அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் மோரி இவ்வாறான சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரிச்சர்ட் மோரி பங்கேற்றார். கழ்ச்சியில் அவர் பேசியதாவது;

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விரும்பவில்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கு புட்டின் முன்வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. புட்டின் நம்மை அவருடன் இணைத்துக் கொண்டிருக்கிறார்.

புட்டின் தனது ஏகாதிபத்திய வழிமுறையை திணிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியாது.

உக்ரைனில் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என புட்டின் நினைத்தார். ஆனால், அவரும் மற்றவர்களும் உக்ரைனை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி