எலும்பு முறிந்தால் 3 நிமிடத்தில் ஒட்டும் அதிசய பசை – மருத்துவ உலகில் சாதனை படைத்த சீனா

சீன மருத்துவர்களால் வெறும் 3 நிமிடங்களில் உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கும் புதிய பசை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள சர் ரன் ரன் ஷா மருத்துவமனை மருத்துவர்களால் இந்த பசை கண்டுடிிகக்ப்பட்டுள்ளது.
‘போன் 02’ எனப் பெயரிடப்பட்ட இந்த மருத்துவ பசையை, எலும்பியல் நிபுணர் லின் சியான்பெங் தலைமையிலான குழு உருவாக்கியது.
கடலடியில் சிப்பிகள் ஒட்டும் இயற்கை முறைதான் இவர்களின் இந்த கண்டுபிடிப்பின் முக்கிய விடயமாக அமைந்துள்ளது.
இந்த பசை, இரத்தம் நிறைந்த சூழலிலும் எலும்புகளை துல்லியமாக ஒட்டுகிறது. மேலும், இது உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்பட்டுவிடுவதால், மறு அறுவைச் சிகிச்சை தேவையில்லை.
இதுவரை 150க்கும் மேற்பட்ட நோயாளிகளில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு, எலும்பு முறிவு சிகிச்சையில் உலோகத் தகடுகளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.