உத்தரபிரதேசத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட 15 நாள் பெண் குழந்தை பொலிசாரால் மீட்பு

உத்தரபிரதேசத்தில் உள்ள கோதாபூர் கிராமத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட 15 நாள் பெண் குழந்தையை பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
குழந்தையின் கை தரையில் இருந்து நீண்டு கொண்டிருப்பதை கிராமவாசி ஒருவர் கவனித்ததை அடுத்து மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் குழு குழந்தையை மீட்டு உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
“குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் அவளுக்கு ஒரு பிரத்யேக மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார்.” என்று மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடித்து, அவளை அடக்கம் செய்ததற்குக் காரணமானவர்களை அடையாளம் காண முயற்சிகள் நடந்து வருவதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
(Visited 2 times, 2 visits today)