அலையென திரண்ட மக்கள் – முதல் தேர்தல் பரப்புரைக்காக திருச்சியில் களமிறங்கிய விஜய்!

த.வெ.க தலைவர் விஜய் இன்று (13.09) தனது தேர்தல் பரப்புரையின் முதல் கூட்டத்தை திருச்சியில் நடத்தவுள்ளார்.
இதில் கலந்துகொள்வதற்காக காலை சிறப்பு விமானத்தில் பயணித்த அவர் தற்போது திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் பரப்பரையை நடத்தவுள்ளார்.
இந்நிலையில் அவரை காண ஏராளமான மக்கள் திரண்ட நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் 50 பேர் மயக்கமடைந்த நிலையில் முதலுதவிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய வேறு கட்சிகள் வழமைபோல் அவருக்கு ஒன்றுசேரும் கூட்டங்களை விமர்சித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வடிவேலு கூட்டினாலும் கூட்டம் சேரும் எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சேரும் கூட்டமெல்லாம் ஓட்டாகாது எனத் தெரிவித்துள்ளார்.