நைஜீரியாவில் குடித்து விட்டு விமானத்தை செலுத்திய விமானிகளால் பரபரப்பு!

நைஜீரியாவில் விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் குடித்துவிட்டு விமானத்தை செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜுலை மாதம் போயிங் 737 விமானத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தை இயக்கிய ஏர் பீஸ் நிறுவனம், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறியதற்காக 64 வயதான விமானி பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், துணை விமானி பின்னர் தனது பணிக்குத் திரும்பியதாகவும் தெரிவித்துள்ளது.
NSIB நடத்திய சோதனைகளில், விமானி மற்றும் துணை விமானி எத்தில் குளுகுரோனைடு (EtG) உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும், கேபின் குழு உறுப்பினர் ஒருவருக்கும் கஞ்சாவில் உள்ள மனோவியல் கூறு (THC) இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
NSIB இந்த சம்பவம் குறித்து தற்போதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் மேம்பட்ட பயிற்சி மற்றும் உள் நடைமுறைகளை வலுப்படுத்த பரிந்துரைத்துள்ளது.