எதிரிகள் எந்த நாட்டில் இருந்தாலும் அழிக்கப்படுவார்கள் – இஸ்ரேல் எச்சரிக்கை

உலகில் எந்த நாட்டில் எதிரிகள் பதுங்கி இருந்தாலும் அவர்களை ஒழித்துக்கட்டுவோம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில், இஸ்ரேல் கட்டாரில் தங்கியுள்ள ஹமாஸ் தலைவர்களின்மீது தாக்குதல் நடத்தியது.
கட்டாருக்குள் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஹமாஸ் உள்ளிட்ட போராளிகள் அமைப்புகளுக்கு எச்சரிக்கைவிடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“வெளிநாடுகளில் பதுங்கி இருப்பதால் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைத்திட வேண்டாம். இஸ்ரேல் அதன் எதிரிகளை அழிக்கத் தயங்காது,” என்று தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
(Visited 3 times, 3 visits today)