பொழுதுபோக்கு

குக் வித் கோமாளியில் வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. கதறி அழுத சுனிதா

தமிழக மக்களால் மிகவும் ரசித்து பார்க்கப்படும் ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் பிரியா ராமன், ராஜு, லட்சுமி ராமகிருஷ்ணன், ஷபானா, உமைர் உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஆறு போட்டியாளர்களை இரு அணிகளாக பிரிந்தனர். இதில் ஷபானா, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் நீலம் அணி என்றும், ராஜு, பிரியா ராமன் மற்றும் உமைர் சிவப்பு அணி என்றும் போட்டியிட்டு வந்தனர்.

மூன்று வாரங்களாக இந்த இரு அணிகளுக்கு இடையே கடுமையாக சமையல் போட்டி நடைபெற்று வந்த நிலையில், இதில் அதிக தோல்விகளை சந்தித்தது சிவப்பு அணி எலிமினேஷன் டாஸ்கை எதிர்கொண்டனர். சிவப்பு அணியில் உள்ள ராஜு, பிரியா ராமன் மற்றும் உமைர் இடையே எலிமினேஷன் சமையல் நடந்தது.

இதில் குறைவான மதிப்பெண்களை பெற்று உமைர் குக் வித் கோமாளி 6ல் இருந்து வெளியேற்றப்பற்றுள்ளார். உமைர் எலிமினேட் ஆனதும் சுனிதா கதறி அழுதார். மேலும் ராஜு தனது நண்பன் உமைர் வெளியேறுவது குறித்து வேதனையை பகிர்ந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தற்போது வெளியேறியுள்ள உமைர் கண்டிப்பாக வைல்ட் கார்டில் மாஸ் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்