இந்தியாவில் அபூர்வ சம்பவம் – சிசுவின் வயிற்றுக்குள் இரு சிசுக்கள்

இந்தியாவில் பிறந்து 20 நாட்களான சிசுவின் வயிற்றிலிருந்து இரு சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Foetus in foetu என்கிற அந்த நிலை மிகவும் அரிதான போதிலும், மருத்துவர்கள் வெற்றிகரமாக அதனை அகற்றியுள்ளனர்.
இதுவரையில் உலகெங்கும் அவ்வாறான 200க்கும் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளது. அவற்றில் சில இந்தியாவில் பதிவாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
கர்ப்பக் காலத்தின் தொடக்கத்தில் அது ஏற்படுவதுண்டு. குறைபாடுள்ள ஒரு சிசுவை இன்னொரு சிசு ஈர்த்துக்கொள்கிறது. இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் 3 குழந்தைகளுடன் கர்ப்பமாக இருந்தார்.
அதில் இரு சிசுக்கள் எஞ்சிய ஒரு சிசுவின் வயிற்றில் வளரத் தொடங்கின. இந்த ஆண்டு ஜூலை மாதம் சிசு குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
அறுவைச் சிகிச்சை கடுமையாக இருந்தாலும் அந்தச் சிசு தற்போது நலமாக இருப்பதாகக் குழந்தை மருத்துவர் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
அறுவைச் சிகிச்சை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அந்த சிசு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாகவும் நலமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.