நடாஷாவை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
பௌத்த தத்துவம் மற்றும் கலாச்சாரத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இன்று (28) காலை கைது செய்யப்பட்ட நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை இன்று கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து,
ஜயனி நடாஷா எதிரிசூரிய என்ற இந்த பெண் வெளிநாடு செல்ல வந்த போது கைது செய்யுமாறு கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கட்டுநாயக்க குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் பொலிஸ் மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை அவர் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பௌத்த தத்துவத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
அவரது இந்த கருத்து குறித்து சமூகத்தில் பலத்த விவாதம் எழுந்ததுடன், இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டனர்.
அத்துடன், மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மஞ்சு ஸ்ரீ நிஷ்ஷங்கவின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் கேட்டுக் கொண்டார்.