ஜெர்மனியில் கட்டாய இராணுவ சேவை அறிமுகம் – 2026 முதல் அமுலாகும் நடைமுறை

ஜெர்மனியில் கட்டாய இராணுவ சேவை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் புதிய சட்ட வரைவை உருவாக்கியுள்ளது.
சில குழுக்களுக்கு இராணுவ சேவை கட்டாயமாக்கப்படும். 2026 ஜனவரி முதலாம் திகதி முதல், 18 வயதை பூர்த்தி செய்யும் அனைத்து இளம் குடிமக்களும் ஒன்லைன் கேள்வித்தாளை நிரப்ப வேண்டும். இது உடற்பயிற்சி, திறன் மற்றும் இராணுவ சேவையில் ஆர்வம் போன்ற அம்சங்களை மதிப்பீடு செய்யும்.
இளம்பெண்களுக்கு இது விருப்பதின் அடிப்படையில் இருக்கும். தகுதியானவர்கள் முதலில் விருப்ப மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவர். ஆனால் 2027 ஜனவரி 1 முதல், இந்த பரிசோதனை கட்டாயமாக மாறும்.
இந்த சட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பிறகு மட்டுமே நடைமுறைக்கு வரும். ரஷ்யாவுடன் நிலவும் பதட்டம் மற்றும் நேட்டோ இலக்குகளை அடைவதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் இதை விமர்சித்து வருகின்றன. பசுமைக் கட்சி தன்னார்வமான சேவையை ஆதரிக்கிறது எனவும், பாராளுமன்றத்தில் இதற்கு ஆதரவாக வாக்களிக்காது எனவும் தெரிவித்துள்ளது.