2000 ஆண்டுகள் பழமையான படகு கண்டுப்பிடிப்பு – இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என ஊகம்!

கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் பழமையான படகு ஒன்று கலிலி கடலின் கரையோர பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இது ரோமானிய கால கட்டுமானத்தை சேர்ந்தது எனவும் கார்பன்-14 என திகதியிடப்பட்டிருப்பதாகவும் கடல்சார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக நிலவிய வரட்சிக்கு பின் குறித்த படகு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் படகை திறந்தபொழுது மழை கொட்டியதாகவும், வானவில் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இது இறைவனின் ஆசியை குறிப்பதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் கர்ட் ராவே, கட்டுமானத்தின் சாத்தியமான திகதியை கிமு முதல் நூற்றாண்டிலிருந்து கிபி முதல் நூற்றாண்டு வரை கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகிறார்.
படகின் தட்டையான அடிப்பகுதி வடிவமைப்பு, மீன்பிடிக்க ஏற்றது, மற்றும் மலிவான உள்ளூர் மரத்தால் செய்யப்பட்ட பழுதுபார்ப்புகள், அது ஏழை மீனவர்களுக்கு சொந்தமானது என்பதைக் குறிக்கிறது, இது இயேசுவின் சீடர்களின் நற்செய்தி விவரிப்புகளுடன் ஒத்துப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படகு புனித இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
காரணம் இயேசு தண்ணீரில் நடந்த கதை, 5,000 பேருக்கு உணவளித்த பிறகு, இயேசு தனது சீடர்களை கலிலேயா கடலுக்குக் கடந்து அனுப்பியதாக பைபிளில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த படகு அவரின் சீடர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.