ஆஸ்திரேலியா முழுவதும் சந்தமின்றி பரவிவரும் தொற்றுநோய் – கருச்சிதைகள் ஏற்பட முக்கிய காரணம்!

மலட்டுத்தன்மை மற்றும் கருச்சிதைவுகளை ஏற்படுத்தக்கூடிய, அதிகம் அறியப்படாத பாலியல் ரீதியாக பரவும் தொற்று ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பெரும்பாலான மக்கள் மைக்கோபிளாஸ்மா ஜெனிட்டலியம், Mgen அல்லது MG என்றும் அழைக்கப்படுகிறது, இது பிறப்புறுப்பு வலி மற்றும் இரத்தப்போக்கை ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியா என கூறப்படுகிறது.
இந்த தொற்று ஏற்பட்டுள்ள பலருக்கு பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. மேலும் பல ஆண்டுகளாக அறியாமலேயே இந்த தொற்றுநோயை சுமந்து செல்ல முடியும்.
இந்த தொற்றானது பாலியல் உறவு மற்றும் தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவக்கூடும். இதனால் கருச்சிதைவுகள், மலட்டு தன்மை என்பன அதிகரிக்கவாய்பிருப்பதாக கூறப்படுகிறது.
மோனாஷ் பல்கலைக்கழகத்தின் மெல்போர்ன் பாலியல் சுகாதார மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் கேட்ரியோனா பிராட்ஷா, இந்த தொற்று ஏற்கனவே பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருப்பதால் குறிப்பாக கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.