நயன்தாரா ரூட்டை பின்பற்றும் அனுஷ்கா…

நடிகை அனுஷ்கா கடந்த பல வருடங்களாக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார். அவர் குண்டாக இருப்பதை பற்றி ட்ரோல்கள் வர கூடாது என்பதற்காகவே வெளியில் அவர் எந்த நிகழ்ச்சிகளுக்கும் வருவது இல்லை.
தற்போது அனுஷ்கா காட்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருக்கிறார். கிரிஷ் இயக்கி இருக்கும் அந்த படத்தில் விக்ரம் பிரபு ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நயன்தாரா தான் நடிக்கும் படங்களுக்கு வர மாட்டேன் என ஒப்பந்தம் போடும்போதே கண்டிஷன் போட்டுவிடுகிறார்.
அதே போல தற்போது அனுஷ்காவும் காட்டி படத்தின் ப்ரோமோஷனுக்கு வர மாட்டேன் என ஆரம்பத்திலேயே ஒப்பந்தம் போட்டுவிட்டாராம். அதனால் தான் அவர் நிகழ்ச்சிகள் எதற்கும் வரவில்லை என தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.
நயன்தாரா ரூட்டை அனுஷாக் பின்பற்றுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.