உலக வெப்பமயமாதலால் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் ஆபத்தில்

உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலை, வேலைக்குச் செல்கின்ற மக்களின் உடல்நலத்துக்கும் செயல்திறனுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என ஐ.நா எச்சரித்துள்ளது.
அதிக வெப்பத்தால், திறந்தவெளியில் மற்றும் குளிரூட்டப்படாத அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றது.
உடனடியாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், ஐ.நா. அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
20 டிகிரி செல்சியஸை கடந்தபின், ஒவ்வொரு கூடுதல் டிகிரிக்கும் ஊழியர்களின் செயல்திறன் 2% முதல் 3% வரை குறைகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உடல் நலத்தைக் குன்றச் செய்வதோடு, நிறுவனங்களின் உற்பத்தித்திறனையும் பாதிக்கும் நிலையில் உள்ளது.
மிகை வெப்பத்தால் வெப்பத்தாக்கம், வெப்ப உறிஞ்சம், சிறுநீரக செயலிழப்பு போன்ற உடல்நல பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும், இது வெறும் சுகாதார சிக்கலாக மட்டுமல்லாமல், உலகளாவிய பொருளாதாரத்தைப் பாதிக்கும் அபாயமாகவும் மாறி வருகிறது என்று ஐ.நா. தெரிவித்தது.
இந்நிலையில், அரசாங்கங்கள், நிறுவன உரிமையாளர்கள், மற்றும் சுகாதார துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும், வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள வழிகாட்டி முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.