வைரமுத்துவை இளையராஜா ஒதுக்கி வைக்க இதுதான் காரணம்…

80களில் இருந்து இளையராஜா மற்றும் வைரமுத்து இணைந்து பல படங்களில் பணியாற்றி மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்தனர்.
சுமார் 7 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக பணியாற்றி சிறந்த காம்போவுக்கென்றே ரசிகர்கள் இருந்தனர்.
இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த புன்னகை மன்னன் 1986ல் ரிலீஸானப்பின் வைரமுத்துவும் இளையராஜாவும் பிரிந்தனர்.
அவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்று இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அதில், இளையராஜா வளர்ந்ததற்கு தன் பாடல் வரிகள் தான் காரணம் என்று வைரமுத்து பேசியதே அவர்களின் பிரிவுக்கு காரணம்.
10 ஆண்டுகாலம் இளையராஜா தன்னை ஒதுக்கி வைத்து அப்போது வைரமுத்துவுடன் இணைந்து தன் இடத்தை பிடித்துவிட்டார்.
வைரமுத்து கல்லூரி விழாக்களில் இளையராஜா வளர்வதற்கு தனது பாடல்களே காரணம் என்று பேசியதே இருவரும் பிரிவுக்கு காரணம் என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.