தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது.
தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. டெவால்டு ப்ரீவீஸ் 26 பந்தில் 53 ரன்களும், வான் டெர் டசன் 26 பந்தில் 38 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 172 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடகக் வீரரான கேப்டன் மிட்செல் மார்ஷ் 37 பந்தில் 54 ரன்கள் விளாசி, சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
அதன்பின் மளமளவென விக்கெட் சரிந்தது. ஆனால் மேக்ஸ்வெல் அபாரமான ஆட்த்தை வெளிப்படுத்தியது.
19.5 ஓவரில் 173 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
மேக்ஸ்வெல் 36 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.