உலகம்

டிரம்ப் – புட்டின் பேச்சு தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி – அமெரிக்கா எச்சரிக்கை

டிரம்ப் – புட்டின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் இந்தியாவுக்கு கூடுதலாக மீண்டும் வரிவிதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீ த வரி விதித்தது. மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், இந்தியா மீதான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இதனிடையே, உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் – ரஷ்ய அதிபர் புட்டின் இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

இது சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால், ரஷ்யா கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என டிரம்ப் எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியதாவது: இந்தியா மீது வரி விதிக்கப்பட்டு உள்ளது. அலாஸ்காவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றார்.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்