செய்தி

இலங்கையில் கொத்து ரொட்டி, முட்டை ஆப்பத்தின் விலை அதிகரிப்பு

இலங்கையில் கொத்து ரொட்டி, முட்டை ஆப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளும் மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக, நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலைகள் குறைந்திருந்தாலும், இவற்றின் விலை அதிகரித்துள்ளது.

இதனிடையே, ஒரு முட்டையின் விலை ரூபாய் 29 ரூபாய் முதல் 33 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், பல்வேறு உணவகங்களில் கொத்து ரொட்டியின் விலை மிக அதிகமாக இருப்பதாகவும், முட்டை ஆப்பம் மற்றும் முட்டை ரொட்டியின் விலைகள் சமமாகவும் அதிகமாகவும் இருப்பதாக, நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, உடனடியாக நுகர்வோர் அதிகார சபை தலையிட்டு மக்களுக்கு சலுகைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!