ஈராக் முழுவதும் உச்சக்கட்ட வெப்பம் – நாடு முழுவதும் மின்தடை – நெருக்கடியில் மக்கள்

ஈராக் முழுதும் உச்சக்கட்ட வெப்பத்தால் மின்தடை ஏற்பட்டுள்ளது. கோடைக்கால வெப்பம் மின்சாரத்துக்கான தேவையை உயர்த்தியிருப்பதால் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சில பகுதிகளில் வெப்பநிலை 50 பாகையை எட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், இது ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கக்கூடும் என வானிலை அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
மின்தடையால் ஏற்பட்ட பாதிப்பு பல வீடுகளில் குறைவாகவே இருந்தது, ஏனெனில் மக்கள் தனிப்பட்ட மின்சார உற்பத்தி இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்தடையை சரிசெய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஈராக்கில் மின்தடை என்பது பொதுவாகவே அடிக்கடி ஏற்படும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக வெப்பமான காலங்களில், இந்த பிரச்சனை மிகவும் மோசமான நிலையை அடைகிறது.
(Visited 4 times, 4 visits today)